யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுகந்தி சிவகுமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நடமாடிய வீட்டில் படமாகிப் போனவளே!
உம்மை எம் மன வீட்டில் சுமந்து நிற்கின்றோம்!
உன் பெயர்தனைக் கூறுகையில்
பெற்ற பிள்ளைகள் கதறுதம்மா....!
யார் அறிவார் இவ்வுலகினிலே
ஆண்டு பத்து போனதென்று அம்மா....!
மனசு பாரமாய் உள்ளபோது
பரிவுடன் பழக நீங்கள் இல்லை!
ஆற்றல் இழந்த எம் நிலையை
ஊக்கபடுத்த நீங்கள் இல்லை!
எம் தவறுகளை துல்லியமாய்
தடைசெய்ய நீங்கள் இல்லை!
காற்றோடு பூ உறவாடுவதை போல-எங்கள்
மனதோடு மனம் உறவாட நீங்கள் இல்லை அம்மா!
காற்று எத்திசையில் திக்கிமுக்கி திரிந்தாலும்
என்றும் பூவின் வாசத்தை இழக்காது!
நாம் உங்கள் பிள்ளைகள் உங்கள் வாசத்தை தவிர
வேறு சுவாசத்தை சுகிக்கமாட்டோம் அம்மா....!
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் பாசம் அவர் மறைந்து
பத்து ஆண்டுகள் ஆனாலும் தொடரும்....!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!