திதி : 10-02-2026
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுதாகர் பரஞ்சோதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவு அஞ்சலி
ஒரு ஆண்டு கடந்துவிட்டது…
ஆனால் நீ எங்களை விட்டு சென்றாய்
என்பதை இன்னும் எம்மால்
முழுமையாக உணர முடியவில்லை.
காலம் நகர்ந்தாலும்,
உன் நினைவு எங்கள் நெஞ்சில்
நிரந்தரமாக பதிந்திருக்கிறது.
அன்பை வெளிப்படையாகக் காட்டாத உயிர் நீ…
சொல்லாமல் நேசித்தாய்,
காட்டாமல் காத்தாய்,
நீ இல்லை என்ற வெற்றிடம்,
எவராலும் நிரப்ப முடியாத
ஒரு புனித இடமாக மாறியுள்ளது.
உன் நினைவுகள் எங்கள் மூச்சோடு கலந்திருக்கின்றன.
நாங்கள் வாழும் ஒவ்வொரு நாளிலும்
நீ எங்கள் பலமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறாய்.
தனக்குப் பிடித்தவர்களைத் தான்
இறைவன் விரைவில் தன்னருகில் அழைப்பார் என்பார்கள்…
அதனால்தானோ,
இளகிய மனம் கொண்ட
எமது நல்லுயிரை தன் உலகத்திற்கு அழைத்துச் சென்றாரோ?
நீ இல்லாத இந்த உலகில்,
எங்களை ஆற்றுபவர் எங்கள் ஐயனார்.
அவர் அளிக்கும் அருளும் தைரியமும்
எங்களை நிலைநிறுத்தும் சக்தியாக,
வாழ்க்கையை எதிர்கொள்ளும் உறுதியாக மாறியுள்ளது.
உன் ஆத்மா சாந்தி அடையட்டும்…
எங்கள் ஒற்றுமையும்,
எங்கள் நல்வாழ்வும்,
எங்கள் சந்தோஷமான வாழ்க்கையும்
உனக்கான உண்மையான அஞ்சலி. 🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸
— உன்னை என்றும் மறக்க முடியாத குடும்பத்தினர்
Sugi, I was shocked and very sad for your loss..accept my condolences please. Nimmi Rajan.