Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 NOV 1956
இறப்பு 29 MAR 2014
அமரர் சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி
வயது 57
அமரர் சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி 1956 - 2014 நாகர்கோவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாகர்கோவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், செம்பியன்பற்று தெற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 23-03-2024

விழிநீரை துடைக்க விரல் ஒன்று இருந்தது அன்று
பத்து ஆண்டுகள் கழிந்தது இன்று
இதயம் கருகி இமைகள் நனைகிறது
உங்கள் பிரிவினிலே...

எத்தனை உறவுகள் இருந்தாலும்
தோள்சாய அப்பா இல்லையே!
என கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்க விட்டுவழி
தெரியாத் தூரம் விரைந்தோடி சென்றதேனோ!

வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....

காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

நீங்கள் எமக்கு வழிகாட்டியாய் எங்கள்
இதயத்திலேயே வாழ்கிறீர்கள் அப்பா!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute