Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 22 MAR 1950
இறப்பு 12 OCT 2021
அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதன்
இலங்கை நீர்ப்பாசன இலாகாவின் முன்னாள் தொழில்நுட்பவியலாளர், கொக்குவில் இந்துக்கல்லூரி பழையமாணவர், கொக்குவில் இந்துக்கல்லூரி கனடா பழையமாணவர் சங்கம்- முன்னாள் தலைவர், கனடா ஐயப்பன் குருசாமி(சண் சாமி)
வயது 71
அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதன் 1950 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னார் 12-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதமடைந்த எமது குடும்பத்தின் ஆணிவேர் சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்கள் நோயுற்று St.Michael Hospital, Sunny Brook Hospital, Oshawa Lakeridge Hospital களின் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சகல வைத்திய உதவிகளை நல்கிய வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தாதிமார், நிர்வாக உத்தியோகத்தர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கும்,

அவர் விரைவாக பூரணகுணமடைய வேண்டி பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அவர் இறைபதமடைந்த செய்தியறிந்து எம் இல்லத்துக்கு வந்து ஆறுதல் கூறியோருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் மூலம் பல நாடுகளிலுமிருந்து அனுதாபம் தெரிவித்தோருக்கும்,

அவரது இறுதி நிகழ்வை மிகச்சிறப்பாக செய்ய உதவிய Chapel Ridge Funeral Home நிர்வாகத்தினர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் மூன்று நாட்களும் மண்டபத்திற்கு நேரில் வருகைதந்து அவருக்கு இறுதி வணக்கத்தை செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் தந்தோருக்கும்

மலர்வளையங்கள் அனுப்பியோருக்கும், மலர் அலங்காரங்கள் செய்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டோருக்கும், அஞ்சலி உணவுகள் வழங்கியோருக்கும், இறுதிக் கிரியைகளை முறையாக நடத்தியோருக்கும், தேவார பாராயணம் செய்தோருக்கும், இறுதி ஊர்வலத்தை மிகச்சிறப்பாக செய்ய உதவிய அனைத்து உறவுகளுக்கும்

இசையால், தாளத்தாள் பறை வாத்திய இசை மூலம் இறுதி மரியாதை செலுத்திய கலைஞர்களுக்கும், மரண அறிவித்தல் வெளியிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு மத்த இணையத்தள ஊடகங்களுக்கும்,

 அஞ்சலி பாடல்கள் பாடிய கலைஞர்களுக்கும் வீட்டிற்கு உணவுகள் கொண்டு வந்து அனைத்து உறவுகள், நண்பர்களுக்கும் மேலும் இந்த இக்கட்டான சுழ்நிலையில் தோளோடு தோள் நின்று தேவையான உதவிகளைப் பார்த்துப் பார்த்துச் செய்த அனைத்து உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்

 அன்னாரின் அன்பு மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 40 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 13 Oct, 2021