யாழ். கோண்டாவில் மேற்கைப்பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் செந்தில்நாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து வருடங்கள் பறந்து போனதே
அப்பா
நீங்கள் இல்லாமல் நாங்கள் பட்ட கஷ்டமும்
மறந்து
போகுமோ அப்பா
எங்களைப் பெற்று பாராட்டி சீராட்டி வளர்த்து
என்றும்
அழியாச் செல்வமாகிய கல்விச்செல்வத்தையும்
எங்களுக்குத் தந்துவிட்டு போய்விட்டீர்கள் அப்பா!
இன்று நாங்கள் தலை நிமிர்ந்து வாழுகின்றோம் என்றால்
அது உங்களால் தானே அப்பா
இதைப்பார்ப்பதற்கு நீங்கள் இல்லையே
என்று நினைக்கும்பொழுது
அடிமனதில் ஏதோ இனம்புரியாத
ஒரு வலியுடன் வாடுகின்றோம்
உங்கள் புன்முறுவல் பூத்த முகம்
தினமும் எங்கள் கண் முன் நிழலாடுகிறதே அப்பா!
பத்து ஆண்டுகள் என்ன?
நூறு ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவு எங்கள்
மனதை விட்டு அகலாது
ஆலம் விழுதுகள் போல்
உறவுகள் ஆயிரம் இருந்தும் என்ன
எங்கள் வேரென நீயிருந்தாய்
அதில் நாம் வீழ்ந்துவிடாதிருந்தோம்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து மீளாத்துயில் கொண்ட
என் அன்புத் தந்தையின்
ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, மகன், மகள்