“நாயிற்கடையாய் கிடந்த அடியேற்கு தாயிற்சிறந்த தயவான தத்துவனே” .......மனிதர்களைத் தொலைத்துவிட்டு மௌனமாய் சுவாசித்தலை நிறுத்திக் கொண்டது ""பிரபஞ்சம்""........ உன் குரலற்றுப் போன COVID 19 தினங்களில் எதையோ வெளிச்சம் போட்டுக் காட்ட மலங்க மலங்க விழித்தபடி காத்திருக்கிறது விடியல் ... இவையெதையும் கண்டுகொள்ளாமல் கூடு கட்ட மண்பிசைகிறது செங்குளவி.. பூனையொன்று தன்னை முயலென்று பாவித்தபடி ஓட .. புண்களை நக்கியவாறு குட்டிகளோடு கிறங்கிக் கிடக்கிறது கருப்பு நாய்.. தூணிலும் ...துரும்பிலும் ....இருந்தேனும் அருள்பாலிக்காமல் பரிபூரண ஓய்விலிருக்கிறார் கடவுள் .. தொலைதூரத்திலிருந்து எனக்குள் மாயை சமைக்குமிந்த """ மா கேளரா வீச்சாரமு மதுகண்ண ஸ்ரீ ராமச்சந்ர........""" "இசை" யின் கணங்களேனும் நீடிக்கக் கடவதாக ........ இந்தத் துயரம், வார்த்தைகளற்ற பாடலாக... ஓசையற்ற இசையாக... அசைவுகளற்ற ஆடலாக... மாறத் தொடங்கும்......... Tharmini Gobi.
To die is not to live no more To die is to go away from Opening your soul to a world of beauty Eternal paradise to rest in peace Rest in peace