யாழ். சாவகச்சேரி மடத்தடி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் புலேந்திரலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இறையடி சேர்ந்து 31 நாட்கள் நீங்கியும்
நித்தம் நினைவில் நிற்கும்எங்கள் குடும்ப விளக்கு!!
எம்மோடு இருந்து எம்மையெல்லாம்
இயக்கி எமக்கு வழிகாட்டி...
பாசமிகு தந்தையாய் பண்புள்ள
அன்பராய் வாழும்
எங்கள்
இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதப்பா...
ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும்
உங்களின்
எண்ணங்களும் செயல்களும்
எங்களுடனே
பயணிக்கும்
அப்பா
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது
நாட்கள்
பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
சித்தப்பா உங்கள் ஆத்மா சாந்தியுற்று இறைபாதம் சேர்ந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.🙏. தங்கை நந்தினி தம்பிமார் சதா , சத்தியா, சரா, குகா "மக்கள் தந்தைக்காற்றும் உதவி இவர் தந்தை என்நோற்றான் கொல் எனும்...