Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 JAN 1934
இறப்பு 20 MAY 2019
அமரர் சுப்பிரமணியம் ஜெயபாலசிங்கம்
வயது 85
அமரர் சுப்பிரமணியம் ஜெயபாலசிங்கம் 1934 - 2019 யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் ஜெயபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்று போலிருக்கிறது அப்பா
எமைவிட்டு எங்கு சென்றீர்கள்?
ஆண்டுதான் ஒன்று ஓடி மறைந்ததுவோ
அப்பாவின் அழகு முகம்
இனிப்பார்க்க முடியாதோ?
பார்க்குமிடம் எல்லாம்- உங்கள்
சிரித்த முகம் தெரியுதப்பா
கேட்கும் ஓசையெல்லாம்- நீங்கள்
அழைப்பது போலிருக்குதப்பா
தூக்கமில்லா இரவு பகல்
கண்ணீரில் கரையுதப்பா
ஆறுதல் வார்த்தைகளை
மனசேற்க மறுக்குதப்பா...

இமைப்பொழுதும் எனைப்பிரியா
பெருந்துணையாய் இருந்தவரே
கணப்பொழுதில் எனைப்பிரிந்து
நெடுந்தூரம் சென்றீரோ
உயிரற்ற உடலாய்
உருகித்தவிக்கின்றேன்...
ஏங்கி எனை அழவைத்து
எங்கப்பா சென்றீர்கள்...

நம்ப முடியவில்லை தாத்தா
எமைவிட்டு எங்கு போனீர்
அன்பாகக் கதைகள் சொல்லி
பாசமாய் அரவணைப்பீர்
ஆலமரம் போலிருந்து
அன்பெனும் விழுதெறிந்தீர்
பகிடிக்கதைகள் பேசி
புன்முறுவல் காட்டி நிற்பீர்
மின்னாமல் முழங்காமல்
எங்கு தாத்தா சென்றீர்கள்?

அன்புநிறை மனைவி பிள்ளை
மருமக்கள் பேரர்களை
அன்பால் அரவணைத்து
அழகான வாழ்வு கொண்டீர்
தாய்ப்பறவை போல
எமை ஊட்டி வளர்த்தவரே
அண்ணா என்று உரிமையுடன்
ஆசையாய் அழைப்போமே
ஒரு வார்த்தை பேசாமல்
நெடுந்தூரம் போனீரோ அண்ணா

கூடு கலைந்த குருவிகளாகி
திசைக்கொன்றாய்ப் பிரிந்து
தோம்பியழுகின்றோம்...
காலம் என்னும் ஒரு வலையை
கடந்தவர் யாரப்பா?
காலங்கள் உருண்டோடி
கரைந்தே போனாலும்
எம் உயிருள்ள காலம் வரை
இதயத்தில் இருப்பீர்கள் அப்பா

அன்னாரின் முதலாம் ஆண்டுத்திவச நினைவஞ்சலி 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். 

தகவல்: மனைவி, பிள்ளைகள்