மன்னார் நாகத்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இரணைமடு மகேந்திரன் வைத்தியசாலை வின்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் பிறான்சிஸ் ஞானப்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் இமைக்கும் நேரத்தில்
ஓர் ஆண்டு ஓடி மறைந்து விட்டது அம்மா..!
உங்கள் நினைவோ ஒவ்வொரு வினாடியும்
எங்களை வாட்டுது அம்மா..!
எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!
அம்மா, அம்மா இல்லையினி இல்லை
குடும்ப குத்துவிளக்கே!
பண்பிற்கும் பாசத்திற்கும் வழிகாட்டியாய்
இல்லை என்று சொல்லாமல் இருப்பதை
எல்லாம் கொடுத்து உதவும் நீங்கள்
விண்ணுலகு விரைந்து ஓராண்டு
ஆனாலும் அம்மா உங்கள் நீங்காத
நினைவுக்காக என் நெஞ்சம்
நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலியை
ஆழ்ந்த பாசத்துடனும் நிறைந்த
நேசத்துடனும் வணங்கி சமர்ப்பிக்கின்றேன்
உங்கள் செல்லப்பிள்ளை!
உங்கள் பிரிவால் வாடும்!
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்