Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 AUG 1941
இறப்பு 18 JAN 2020
அமரர் சுப்பிரமணியம் தனஞ்ஜெயன்
யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்
வயது 78
அமரர் சுப்பிரமணியம் தனஞ்ஜெயன் 1941 - 2020 ஆனைப்பந்தி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தனஞ்ஜெயன் அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று தெஹிவளையில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முதலியார் முத்துத்தம்பி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசன்னா (UK), துஷியந்த் (UK), நர்மதா (UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடாஷா (UK), கார்த்திகா (UK), ஜெயதர்ஷன் (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பரந்தாமன், Dr. கெளரிமனோகரி (UK), சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமிர்தவல்லி, Dr. ரவிராஜன் (UK), சரோஜினிதேவி, கமலேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தியா (UK), ரூபன் (UK) ஆகியோரின் ஆசை தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-01-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில்  இறுதிக்கிரியை  நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices