Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 NOV 1951
இறப்பு 25 MAR 2016
அமரர் சுப்ரமணியம் அரசகுமார்
வயது 64
அமரர் சுப்ரமணியம் அரசகுமார் 1951 - 2016 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Winterthur ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்ரமணியம் அரசகுமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் அன்பு சகோதரனே! 
நொடிப் பொழுதில் எமை
 நோகவிட்டு சென்று விட்டீர்கள்!

வானில் சிந்திடும் துளியில் 
மண்ணில் பயிர்கள் துளிர்விடும் 
எங்கள் விழிகள் சிந்திடும் 
துளியின் வழியில் உங்களை 
கண்டிட முடியாதோ....

ஆண்டுகள் நீளலாம் ஆனால் 
உங்கள் நினைவுகள் நீங்காது 
உங்கள் திருமுகம் எங்களை 
விட்டு மறையுமா மறக்குமா...

ஆண்டுகள் பத்து ஆகிவிட்டது 
ஆறவில்லை எம் துயர் நிஜத்தில்
 நீங்கள் எம்முடன் இங்கில்லை 
நினைவில் தினமும் எம்முடன் 
வாழ்கின்றீர்கள் சகோதரனே...

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices