யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விஜயலெட்சுமி அவர்கள் 17-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
விஜிதா(இலங்கை), உஷாநந்தன்(பிரான்ஸ்), பகீரதன்(பிரான்ஸ்), நதீசன்(பிரான்ஸ்), சுகந்தன்(பிரான்ஸ்), சுகுணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புஸ்பராசா(பிரான்ஸ்), சயந்தினி(பிரான்ஸ்), தங்கா(பிரான்ஸ்), கார்த்திகா(பிரான்ஸ்), துஷியந்தி(பிரான்ஸ்), கஜானா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் குமாரசாமி(கனடா), அருளம்பலம்(பிரான்ஸ்), நடேசன்(இலங்கை), லோகநாதன்(சுவிஸ்), விசுவலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முத்தம்மா, சற்குணம் மற்றும் மங்கையற்கரசி(பிரான்ஸ்), கமலபூரணம்(இலங்கை), சிவயோகம்(யோகம்- சுவிஸ்), விஜயலெட்சுமி(கனடா) மற்றும் காலஞ்சென்ற கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் உடன் பிறவாச் சகோதரியும்,
அபின்ஜா(இலங்கை), கிருஷிகன்(இலங்கை) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சங்கீத்(பிரான்ஸ்), சயித்(பிரான்ஸ்), அனனிஜா(பிரான்ஸ்), ஆரோன்(பிரான்ஸ்), ஆதீஸ்(பிரான்ஸ்), இனியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 17-05-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details