

யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், கிராமசபை வீதி, ஆதிமயிலிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வயிரவநாதன் அவர்கள் 18-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தவபாலசிங்கம், தனபாலசிங்கம் மற்றும் பவளராணி, புஸ்பராணி, நளினராணி, சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கல்யாணி(கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை), பார்த்தீபன், சிவரதன், தயாளன், கலைவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரூபகரன்(பிரதம கணக்காளர், கமத்தொழில் அமைச்சு, பத்தரமுல்ல), உமா, அம்ருதா, ராதிகா, செல்வபவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யஸ்வந், அஷ்விகா, கரிஷ்னி, சபிகா, கபிசன், அகரன், அகர்சன், அதிரயன், விதுசா, அருகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரி, செல்வராசா, தம்பிராசா மற்றும் சிவானந்தம், திலகேஸ்வரி, சிவராஜசிங்கம், இந்திராணி, ஜெயராஜசிங்கம், பரராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2022 புதன்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொட்டுப்பள்ளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சாந்தை சந்தி,
கிராமசபை வீதி,
மயிலிட்டி.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details