

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு, வேலணை, புங்குடுதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் தனுக்கோடி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான அப்பாவே, அருமையான குஞ்சி ஐயாவே,
பெரியப்பாவே, பாசமான மாமாவே,
ஆசையான தாத்தாவே, சீரடிபாபா பூட்டன்
என்று பூட்டப்பிள்ளைகளால் செல்லமாக
அழைக்கப்பட்டு வந்த செல்லப் பூட்டனே!
நீங்கள் சிவபதம் அடைந்து ஆண்டு ஓன்று
ஆகிவிட்டது நம்பவே முடியவில்லை
நேற்று நடந்தது போல எங்கள் கண்களில்
நீர் இன்னமும் காயவில்லை அன்பான
குடும்பத்தின் குல விளக்கே!
ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது, பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!
உங்களது ஆத்மா சாந்தி அடைய நெழுவினி
விநாயகரை வேண்டி நிற்கும் குடும்பத்தினர்
இந்நாளில் அவரை நினைவுகூறும் அன்புப்
பிள்ளைகள், பெறாமக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
உறவினர்கள் நண்பர்கள்.
அன்னாரின் ஓராண்டு நினைவுக்கான நிகழ்வுகள் அவரது சொந்த ஊரான நெடுந்தீவில் 07-11-2018 புதன்கிழமை அன்று நடைபெறும்.