
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சிவசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சின்னத்தம்பி அவர்கள் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, தில்லையம்மா, சித்திராதேவி, தங்கமணியம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இளங்கோ(சுவிஸ்), இளங்குமரன்(டென்மார்க்), நளாயினி(ஆசிரியை- கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரமதி(டென்மார்க்), ஜெயபாலசிங்கம்(அதிபர்- வவுனியா வடக்கு பாரதி வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செந்தூரன், றொசாந், நிசாந், கபீஷனா, ஹர்ஷிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கனிஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று வட்டக்கச்சி மாயவனூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.