Clicky

பிறப்பு 02 AUG 1931
இறப்பு 04 MAY 2020
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை
முன்னாள் ஆசிரியர்- புங்குடுதீவு சித்திவிநாயகர் அரியநாயகம் புலம்
வயது 88
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை 1931 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ந. சிறி 05 MAY 2020 Canada

ஒரு நல்ல உள்ளம் இறைவனடி சேர்ந்து விட்டது. அன்னார் ஒரு ஆசிரியராகவும் அரியநாயகன் புலம் பிள்ளையாரின் அடியாராகவும் செய்த பணிகள் பலவற்றில் எனக்கு ஞாபகத்தில் வருகின்ற சில : 1970/ 1980 களில் இளம் சிறுவர் /சிறுமிகளை வெள்ளி கிழமைகளிலும் திருவிழா நாட்களிலும் பஜனை பாடல்களை பாட வைப்பதிலும் சுவாமி வீதியுலா வரும்போது பன்னிரு திருமுறைகளை பாடவைப்பதிலும் முன்னின்று உழைத்தவர். ஒரு ஆசிரியர் போல் இல்லாமல் எல்லாருடனும் நண்பனாக அவர்களின் வயதிற்கு ஏற்றமாதிரி மாதிரி கதைத்து தொண்டுகள் செய்ய வைத்தவர். திருவெம்பாவை நாட்களில் நடேசு ஆசிரியர், பிற்காலத்தில் தவராசா ஆசிரியர் போன்றோருடன் சேர்ந்து இளைஞர்/ யுவதிகளை அதிகாலையில் ஊர்வீதிகளில் மாணிக்கவாசகரின் பாடல்களை பாடவைத்து வருங்கால சந்ததிக்கு பக்தியை ஊட்டிவளர்த்த பெருமகன். என்போன்றவர்களை பயப்படாமல் தேவார, திருவாசங்களை ஆலயத்தில் படிக்குமாறு ஊக்கப்படுத்தியதுடன் அதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி தந்தவர். இளைஞர்கள் பஞ்சிப்பட்டு நிற்கும் போது சிறிது புன்னகையுடன் பகிடிகதைகளை சொல்லி ஆலய தொண்டு வேலைகளை செய்ய வைத்து விடுவார். கடைசியாக பலமாதங்களுக்கு முன்பு நேரடியாக சந்தித்தபோதும் ஆலய வரலாற்றையும் அதன் அன்றைய நிலைமை பற்றியும் கதைக்க தவறவில்லை. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அரியநாயகன் புலத்தானை வேண்டுகிறோம்.