யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரம் மணியாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசமணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தாயே அம்மா
எம்மை பெற்று வளர்த்து
அன்புக்கும் பாசத்திற்க்கும் உறைவிடமாய்
பல இன்னல்களை கடந்து எம்மை
வளர்த்து வாழவைத்த எம் தாயே!
உதரத்துள் உயிர்தந்து
உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால்
இன்முகம் மலர்ந்திடுவீர்
அன்பான மொழிபேசி
உறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்
அன்போடு எமை ஆழ்வாய்!
என்றென்றும் எழிலோடு- எம்
நெஞ்சிலெ நீ வாழ்வாய்!
உங்கள் ஆத்மா
சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்
தேவி, லோகன்(பிரான்ஸ்), மோகன்(பிரான்ஸ்),
வதனா, மஞ்சுளா(பிரான்ஸ்), ரதன்(பிரான்ஸ்),
மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்