Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 OCT 1925
இறப்பு 11 NOV 2019
அமரர் சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை
வயது 94
அமரர் சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை 1925 - 2019 திருக்கேதீஸ்வரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மன்னார். திருக்கேதீஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்றவர்களான செல்லப்பா, செல்லாச்சி, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கேதீஸ்வரன் நாதன்(நடராஜா), பிருந்தாவனநாதன், சண்முகநாதன், தவமணி, புஷ்பராணி, சோதிநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னம்மா, ராஜராஜேஸ்வரி, காலஞ்சென்ற அன்னலட்சுமி, சூரியபுத்திரன், சிவனேசன், குலமணிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெகதீஸ்வரி, கேதீஸ்வரி, விக்னேஸ்வரி, ராஜேஸ்வரி, சிவசுப்பிரமணியம், கலைச்செல்வி, சிவகௌரி, சயந்தினி, நிர்மலா, நித்தியானந்தன், புஷ்பரூபன், வித்தியானந்தன், சர்மிளா, மேகா நந்தன், பிரியதர்ஷன், தர்ஷிகா, சாகித்யா, பிரதாயினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14 -11-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மன்னார் நல்லதண்ணி பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்