யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி உடுப்பிட்டி
வன்னிச்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ
வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் லோகேந்திரன் அவர்களின் 10ம் ஆண்டு
நினைவஞ்சலி.
அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே உம்
அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா
நீ இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
கடமைகள் நிறைவு கண்டு – இன்று
காலமோ பத்தாண்டு ஆனது – என்று
போறது கதி தான் மோட்சம்
பெற்றது நீங்கள் எனினும்
பாசத்தில் பரிதவித்தோம்
பரமமே தகுமோ ஐயா
நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்
காலங்கள் பத்து ஆண்டுகள் கடந்து போனாலும்
கண்களில் கரைந்து போகவில்லை உங்கள் ஞாபகங்கள்,
பார்வையாலே மொழி பேசி மௌனத்தாலே வார்த்தை
எழுதிய உங்கள் விழிகள் ஊமை பாஷை புரிந்தும்,
நீரை தேடும் பயிர் போல உங்களை பின் தொடர்ந்தன் எம்
காலங்கள் சைகைகள் ஒவ்வொன்றும் புது மொழியை
எமக்குள் உருவாக்கும் ஆண்டுகள் பல கடந்தும் எம்
நாளங்களில் மட்டும் உறைந்திருக்கும்
உங்கள் நினைவுகள் என்றும் என் துணையே
எங்கள் அப்பாவே தேடுகின்றோம்
ஒவ்வொரு கணமும்
உங்கள் பூரண ஆத்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்.. உங்கள் மனைவி, பிள்ளைகள், மருமகன்கள், சகோதரர்கள்..
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி