
மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் சுப்பிரமணியம் கந்தசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா..!
இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அப்பா
ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டதப்பா
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அப்பா
உங்கள் முகம் காண!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அப்பா
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை ஐந்து அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!