Clicky

ஜனனம் 16 JAN 1953
மரணம் 01 JUL 2024
அமரர் சுப்ரமணியம் ஸ்ரீகிருஸ்ணராஜா (பாலா மாஸ்டர்)
வயது 71
அமரர் சுப்ரமணியம் ஸ்ரீகிருஸ்ணராஜா 1953 - 2024 வவுனியா, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Srikrishnarajah
1953 - 2024

இல்லையென்று நீ போனதும் இல்லத்தையும் உள்ளத்தையும அலங்கரித்த உறவுகள், செய்வதறியாது விழிக்கிறோம்.... காலண்டரில் கிழிக்கப்பட்ட உந்தன் மரணத்தின் நாளைக் கையிலேந்தியபடி …! இறுதியில், உன் நிலைத்த பார்வையும் அசையா அங்கமும் அறிவுறுத்திப் போகின்றன... நீ எம்மோடு வாழ்ந்த உனது வாழ்வுக்கான அர்த்தங்களையும் அழிக்க முடியாத நினைவுகளையும்…! உனதிருப்பின் இனிமையை மீட்கொணர முடியாமலும்- உனதிழப்பின் வலியை சகிக்க இயலாமலும்- மறக்கவே நினைக்கிறேன்.... உன் பிறப்பையும் இறப்பையும்…! கண்களில் நீர் மறைக்க காலத்தை நொந்து கொள்ள ஏனோ என் மனம் ஒப்பவில்லை . மனத்தில் தங்கையவள் பாரம் எண்ணியெண்ணி பார்க்கின்றேன் அவள் எப்படி இதைத் தாங்குவாள்…! நிலைகொண்ட தூக்கமோ மாண்ட மயக்கமோ ஓடிய காற்றில் ஒளிந்தாயோ மூட்டிய நெருப்பில் வெந்தாயோ எங்கே போய் தேடுவோம் எனி உன்னை யாம் இறுதிக்கு உறுதி செய்த காலனே இதயத்தை துடித்து நிற்க வைத்தாய் எடுத்துச் சென்ற பிறகு எம்மை இங்கு தவிக்க வைத்தாய் நெருப்பு உன்னை அணைக்கும் முன் என் கண்ணீர் துளிகளால் நனைக்கிறேன் ஓம் ….. சாந்தி …..சாந்தி ….??? கண்ணீருடன் றகு சாந்தி குடும்பம்

Write Tribute