Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 JAN 1945
இறப்பு 17 OCT 2024
அமரர் சுப்பிரமணியம் வீரசிங்கம் 1945 - 2024 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், இல. 10 கோணாவளை வீதி, கொக்குவில் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வீரசிங்கம் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தனலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பு, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வரதலெட்சுமி(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷாந்தன்(வைத்திய கலாநிதி, யாழ் போதனா வைத்தியசாலை), தனுஜியா(முகாமைத்துவ உத்தியோகத்தர், விவசாய திணைக்களம் திருநெல்வேலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தாருணி(விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்), யோகச்சந்திரா(முகாமையாளர், கொமர்ஷல் வங்கி வவுனியா) ஆகியோரின் அருமை மாமனாரும்,

அபினவ், அகரன், சரன்ஷன், நோஷிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சர்வானந்தன்(F.A), அகிலேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை), பிறேமாவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் அன்னலட்சுமி(ஓய்வுநிலை ஆசிரியை), கனகலிங்கம்(F.A), சண்முகலிங்கம்(வைத்திய கலாநிதி, பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சட்டத்தரணி, சுந்தரலிங்கம்-மங்களேஸ்வரி, தர்மகுலசிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்)-சரோஜினி(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
இல. 10(மருத்துவபீடம் முன்பு),
கோணாவளை வீதி,
கொக்குவில்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிரிஷாந்தன் - மகன்
யோகச்சந்திரா - மருமகன்
பிறேமாவதி - சகோதரி

Photos