யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா புளியங்குளம் மற்றும் பண்டாரிகுளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் இராசதுரை அவர்கள் 25-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பொன்னம்மா ஆகியோரின் மருமகனும்,
நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மணிவண்ணன்(சுவிஸ்), மைதினி(சுவிஸ்), சுகந்தினி(கனடா), ரகுவண்ணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தினி, துரைசிங்கம், சிவானந்தராசா, தீபாளினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆரணி, சாரண்யா, விதுசா, யதுசன், பிரவீனா, தனுசன், தருண், ஆஷான், லக்ஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2025 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இல.46/01, அம்மன் கோவில் வீதி, பண்டாரிகுளம், வவுனியா எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பி.ப 01:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.