
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேஸ்வரி அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவானர், பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விநாசித்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வி.சுப்பிரமணியம்(வைத்தியசாலை மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
றுஜிதாம்பாள்(நோர்வே), விஜிதாம்பாள்(ஆசிரியை- கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம்), சிவசக்திவேல்(செல்வன்- டீசல் இஞ்சினியஸ் கோப்பாய்), நிர்மலகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தில்நாதன்(நோர்வே), கிருஸ்ணகுமார்(சபேசன் -ஆஞ்சினேயர் பல்பொருள் வாணிபம், வேலணை), செல்வரஞ்சினி(ஆசிரியை- ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம்), கஜேந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் இந்திராணி, கந்தசாமி, நவரட்ணம், சற்குணநாதன், செல்வறட்ணம், யோகநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,
பிரவின், மகின்(நோர்வே), சர்வஜன், பவீனா, நிருஷிகா, வர்சிகன், அபிஷன், அக்சன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.