யாழ், புங்குடுதீவு 12 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியா, நெடுந்தீவு 8ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரனிஸ்லஸ் பீற்றர் பெர்னாண்டோ 04-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லஸ், லூர்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், கஸ்பார் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி மாசில்லா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மிராண்டா(பிரான்ஸ்), கில்டா(அவுஸ்திரேலியா), லூயிஸ்(அவுஸ்திரேலியா), நிசாந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனோலா(யூயின்), கசியர் பெர்னாண்டோ(தவம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியநாயகம், அருள்மேரி, யேசுதாசன், அகஸ்டின், மரியநாயகி ஆகியோரின் மைத்துனரும்,
மார்த்தமலர், அருளானந்தம், மரியகொறற்றி ஆகியோரின் அன்புச் சகலனும்,
பற்றிக் சேவியர், சஞ்சீவ்குமார், தர்சா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
எண்சோ, ஐனிஸ், அதறிஜானா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நெடுந்தீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்