யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், வரணி, பிரித்தானியா Leicester, நோர்வே Stryn ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீதரன் வேலாயுதப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குல தீபமே!
எங்கள் குடும்பத்திற்கு ஒளி ஏற்றிய
குன்றினில் ஏற்றிய தீபமே!
எமக்குக் கூறாமல் எமைவிட்டு மறைந்ததேனோ
ஆண்டொன்று சென்றாலும் ஆறிடுமோ எம்துயரம்
வருடமொன்று கடந்தாலும் மாறிடுமோ உங்கள் நினைவு
தன் வாழ்வுக்கு வழிதேடி எம் வாழ்வுக்கு வழிகாட்டியவரே
நாம் வாழ்வாங்கு வாழும்போது எமது வாழ்வைப் பாராமல்
வானுலகம் சென்றதேனோ
கடந்துவிட்ட ஒருவருடத்தில்
கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது ஆனந்தக்
கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து
கண்ணீர் வடிக்குதையா
எங்கள் நெஞ்சமதில் நிறைந்திருக்கும்
அன்புத் தெய்வத்தின் பொற்பாதத்தில்
மலர்தூவி மலர் அஞ்சலி செய்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
🙏🏽 ஆழ்ந்த இரங்கல்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி🌺🌺🌺