

யாழ். வேலணை வடக்கு பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு சிற்பனைமுருகன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிகுமாரன் கோமதி அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் கமலம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிகுமாரன்(இளந்தென்றல்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாரங்கா, சாருஜன், கஜானன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துஷியந்தன் அவர்களின் அன்பு மாமியும்,
சிறிபோசன், பகவத்சிங்கம், சிலம்பின்செல்வன், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற குணம்மணி, நகுலா, வசந்தா, விஜி, நாகேஸ்வரி(கிளி), காலஞ்சென்ற சொர்ணேஸ்வரி(சொருபம்), வஸ்ரேஸ்வரி(ரதி), காலஞ்சென்ற சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிவரட்ணம், சபாநாதன்(செவந்தி) மற்றும் கோடீஸ்வரன், கலா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல.228, ஆடியபாதம் வீதி, கொக்குவில்(சரஸ்வதி மில் அருகாமையில்) அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணிக்கு வேலணை அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.