41ம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு 08 MAY 1962
இறப்பு 26 OCT 2020
அமரர் சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு
வயது 58
அமரர் சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு 1962 - 2020 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
41ம் நாள் நினைவஞ்சலி

யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா Lane ஐப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு  அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்புக் கணவனாய் ஆருயிர்த் தந்தையாய்
என்றும் சிரித்த எழிலாம் வதனரே!
இன்பமாய் எம்மோடு ஈடின்றி வாழ்ந்தவரே
என்னே அவசரம் எங்களைப் பிரிந்திட?

கடுகதி வாகனத்தில் காலன் வந்தானோ
சடுதியாய் எம்மைச் சஞ்சலத்தே ஆழ்த்திவிட?
நிலைதடு மாறியாம் நிர்க்கதி யானோமே
தலைவிதி இதுதானோ தங்கமனச் சிறியே!

உனைப்பிரிந்து தவிக்கையிலே ஊரார் உறவெலாம்
எனையழைத்து ஆறதலாய் எத்தனையோ செய்தார்கள்
உனதுடலைக் காணவும் உன்னுடலில் மாலையும்
கனத்துநாம் நிற்கையிலே கடமைபல செய்தார்கள்

நண்பரெலாம் நெகிழ்ந்து நாவாரப்; பேசினார்கள்
கண்ணீரால் அபிசேகம் கதறியும் அழுதார்கள்
மண்வாழ்வை முடித்துநீர் மகேசன்தாள் சென்றீர்கள்
விண்ணகத்தே வீற்றிடுவீர் வேண்டினோம் சாந்தியே!

நாற்பத்தி யோராம்நாள் நாயகனே உந்தனுக்காய்
சீருடனே செய்தே சிவன்தாளை வணங்கினோம்யாம்
ஆற்றிடவோ முடியவில்லை அழுகின்ற சேய்களையாம்
காற்றுடனே கலந்த கண்ணியனே சாந்திகொள்வீர்

உன்பிரிவால் நாமுற்ற துயரிலே பங்குபற்றி
என்னென்ன தேவையோ அத்தனையும் எமக்களித்த
அன்பான உறவையும் அருமை நண்பரையும்
என்றும் மறவாது ஏத்துகின்றோம் சாந்திஐயா!

மண்ணிலே தோற்றிய மரம்செடி கொடிமுதல்
எண்ணி லடங்கா உயிர்களனைத்தும்
மண்ணிலே மடிவதே திண்மமென் றுணர்ந்து
கண்ணின் நீரால் அர்ச்சித்தோம் சாந்தியே!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 57 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.