யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில் இளந்தாரி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசலட்சுமி சிற்சபேசசர்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!உடலில் சுமந்து உயிரை பகிர்ந்துஉருவம் கொடுத்த உயிரே!
வாழ்ந்த நாட்களை வசந்தமாக்கிச் சென்றஎம் தெய்வத்தின் இழப்பு உறவுகளையும்எம் உள்ளத்தையும் விழியோரம்நீர் சொரிய வைக்கின்றதேயம்மா...
ஆண்டு ஐந்து நொந்து நொந்துதான் கரையஎங்கள் கண்ணோர விழி நீரும்இன்னும் காயாமல் போகின்றதே
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்!அம்மா அம்மா என்று அழுகின்றோம்!எங்கே சென்றீர்கள்? எங்கே மறைந்தீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!