Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 13 MAR 1945
இறப்பு 23 APR 2026
திருமதி சோதிலிங்கம் வள்ளிக்கோடி
வயது 81
திருமதி சோதிலிங்கம் வள்ளிக்கோடி 1945 - 2026 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், தமிழ்நாடு திருச்சி கருமண்டபத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோதிலிங்கம் வள்ளிக்கோடி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கப்பலோட்டிய தமிழர்களின் வீரப் பாரம்பரியமிக்க
வல்வை மண்ணில் பிறந்து 
தலைநிமிர்ந்து வாழ்ந்த அன்னையே… 
யாரையும் சாராது
தனித்துவமாய் வாழ்வை வென்றவளே!

எண்பத்தியோராண்டு காலம் 
துணிவோடும் தன்னம்பிக்கையோடும் நடந்தாய்…

இன்று தமிழ்த் திருநாடு திருச்சி மண்ணில் 
ஆதிப் பேரொளியோடு 
ஆன்மா கலந்திடும் உன்னத நிலையை அடைந்தாய்.

உன் உடல், உயிர்கொண்ட அசைவுக்கு 
ஈடாக எதுவும் வருமா அம்மா…

உன் நினைவுகள்
எம் உள்ளத்தில் உயிராய் நிற்கின்றன…

உன் ஆன்மா அமைதி பெறட்டும்… 
இந்த பிரபஞ்சம் மிகப் பெரியது…!! 
அமைதியோடு சென்று வா தாயே.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், நிர்வாக தளங்கள் ஊடாகவும், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராகவன் - மகன்
ரமேஷ் - மகன்
சந்திரா - மகள்
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute