Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 08 OCT 1968
இறப்பு 06 MAR 2021
அமரர் சோதிலிங்கம் சந்திரகலா
வயது 52
அமரர் சோதிலிங்கம் சந்திரகலா 1968 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் சந்திரகலா அவர்களின் நன்றி நவிலல்.

மகளின் மனத்துயர்
அம்மா... நீ எங்கே சென்றாய் என்னை தவிக்கவிட்டு
இது கனவா, நனவா என்று நம்ப முடியாமல்
என் மனம் தவிப்பதை, உன்னை தவிர வேறு எவரால்
அம்மா நம்ப முடியும்!
என்னை ஆசை, ஆசையாக பத்து மாதம் சுமந்த
உன் கருவறை எங்கே!
நான் தத்தி, தத்தி நடந்தததைப் பார்த்து ரசித்த
உன் புன்னகை எங்கே!
கை பிடித்து பாடசாலை அழைத்து சென்ற
உன் கைகள் எங்கே!
வாழ்க்கை என்னும் பாதையில், என்னை நல்வழி நடத்திய
உன் கால்கள் எங்கே!
உன் பிள்ளை, மணக்கோலம் கண்டு
ஆனந்த கண்ணீர் சிந்திய உன் கண்கள் எங்கே!
உன் பிள்ளை தாயாகும் போது, கண்ணும் கருத்துமாக
பார்த்த உன் அன்பு எங்கே அம்மா...
நீ இல்லாத இவ் உலகில் நான் வாழ்கிறேன்
என்று நம்ப முடியாமல்
தவிக்கும் என்னை ஒரு கரம் கொண்டு, ஆறுதல் கூறி,
உஷா உஷா என்று அன்புடனும், உரிமையுடனும்
ஒரு முறை அழைக்க மாட்டியா அம்மா?
மறுஜென்மம் ஒன்று இருக்குமாயின் மறுபடியும்
உன் மடியில் தவழும் பாக்கியம் கிடைக்க
நான் புலம்பி தவிக்கிறேன்..
அம்மா எங்கள் நலத்தை தவிர வேறு ஏதும்
நினைக்காத என் அம்மா....
உன் பாசத்திற்கு ஈடு நீ மட்டுமே..

என் அன்பு அக்காவிற்காய்...
ஒரு கொடியில் இருமலராய் பிறந்தோம் அக்கா
ஒரு நொடியில் எனைவிட்டுப் பிரிந்தாய் அக்கா
அழகான அன்பு முகம் மறைந்ததே - நீ
அள்ளிச்சூடும் மல்லிகை வாடித்தான் போனதே- அக்கா
சலிக்காமல் சமைக்கும் உன் கரங்கள் இன்று
சாய்ந்துதான் போனதே அக்கா
ஓடி ஓடி சுத்தம் செய்யும் உன் கால்கள் - இன்று
ஓய்ந்து தான் போனதே அக்கா
சுவிஸ்காரி என அனை அழைக்கும் - உன்
சுந்தரமொழி எங்கே அக்கா
சொந்தமெல்லாம் அழவைத்து நீ
சொர்க்கம் தான் போனாயோ அக்கா
கட்டிய கணவருக்கும் கண்ணான பிள்ளைகளுக்கும் நீ
கனவாகிப் போனாயோ என் அக்கா
பெயர் சொல்லும் உன் அன்புப் பேரனுக்கும்
பொய்யாகிப் போனாயோ அக்கா
நோய் வந்து படுத்திட்டாலும்- நீ
நேர்மையோடு வாழ்ந்திட்டால்- பார்
நோகாமலும் பேசும் உன்னை- கொடிய
நோய் தான் கொண்டு போனதே அக்கா
சுமைதாங்கியாய் நீயிருந்து பல
சுமைகள் எல்லாம் சுமந்து விட்டு
எவருக்கும் சுமைதராமல் - நீ
எங்குதான் சென்றாய் அக்கா?
கடைசி காலத்தில் உதவிட வேணுமென்று
காப்பீடும் செய்துவிட்டு கடனில்லாமல் - நீ
காணாமல் போனயோ அக்கா
அரை நூறு மட்டும் அழகாய் வாழ்ந்துவிட்டு

அந்த காலனோடு சென்றுவிட்டாய் அரைநொடியில் !
ஆண்டாண்டு சென்றாலும் உன் நினைவு
அழியாது வாழும் அக்கா
ஆண்டொன்று செல்வதற்குள் - உன்
அன்பு மகள் வயிற்றினிலே மீண்டும்
அழகாய் வந்துதிப்பாய் என் அக்கா
அந்த அழகான நாளுக்காய் - நான்
அழுத விழிகளுடனே பார்த்திருப்பேன்!
மீண்டும் வந்து பிறந்துவிடு என் அக்கா!

தங்கை புலம்பல் (ரதி லண்டன்)
உடன் பிறப்புகள் போல் வாழ்ந்த நாம்,
நீ இன்றி தவிக்கிறேன் அக்கா.
ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிட்ட
நாற்காலிகள் உன்னை தேடுகின்றது

சின்ன மாமி
மாமி என்றதும் அன்பின் முகமும்
பாசமுடன் பேசும் தன்மையும்
அன்றிலிருந்து இந்நாள் வரை
மாறாத தோற்றமும் எப்படி சொல்வது மாமி
சிலருக்கு தோற்றங்கள் மாறிப்போகும்
தோல் நிறம் மாறிப் போகும் எதுவுமே மாறாமல்
எறும்பு போல் ஒரு துடிப்பான சுறுசுறுப்பு
இவ்வளவு சீக்கிரம் காணாமல் போகும்
என இதயம் நம்ப மறுக்கின்றது மாமி...

மாமா தேடியதை விட, நீங்கள் தேடிய அன்பை
எப்படி சொல்வது மாமி?
எந்த ஒரு சபையிலும் ஓடிவந்து வாரி
அணைப்பதிலும் சொந்த பந்தங்களை
தேடி தேடி நலம் விசாரிப்பதும்
இனி எங்கே தேடுவது உங்களை மாமி

ஆயிரம் கோயில்கள் ஏறி இறங்கி
ஆயிரம் ஆயிரம் அர்ச்சைைன செய்து
இரண்டு பிள்ளைகளையும் கண்ணாக வளர்த்தது
கண்ணுக்குள் அலைமோதுகின்றது மாமி

அதே அக்கறையை உங்கள் நலனிலும்
காட்டியிருந்தால் இன்னும் சிலகாலம்
எம்மோடு பயணித்து இருப்பீர்கள்
என மனம் தவிக்கின்றது மாமி
மாமி.. மாமி.... மாமி...  

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், ராதிகா, மாறன்
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.