Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 DEC 1971
இறப்பு 29 JUL 2017
திரு சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன்
வயது 45
திரு சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் 1971 - 2017 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Birr(AG) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் ஆருயிர் தெய்வமே!
ஆண்டுகள் இரண்டு
சென்றோடி மறைந்தாலும்
ஆறாதையா உன் நினைவுகள்
தீராதையா உன் சோகம்

எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உன் நினைவுகளை சுமந்தபடி வாழ்கின்றோம்
வளர்ந்து வந்த வழி மாறி நீ எங்கே சென்றாயடா!
விதி விளையாட கூட்டி சென்றதோ!

பெத்தவர்கள் தவிக்கிறார்கள்
உடன் பிறந்தோர் துடிக்கிறோம்!
நீ மீண்டும் உதிர்ந்து வருவாயென
உன் உடன் பிறப்புக்கள் ஏங்குகிறோம்!
தேடியும் கிடைக்காத செல்வமடா- நீ

நீண்ட இவ்வுலகில்
நீள் பணிகள் செய்து நின்றாய்
காலக்கொடுமையினால்
கலைந்தாயோ எம் கண்ணே!
என்றென்றும் உன் நினைவால்
உருகியிங்கு துடிக்கின்றோம்...

என்றும் உன் நினைவுகளுடன் உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் உறவுகள்.

தகவல்: அம்மா, சகோதரர்கள், உறவினர்கள்