யாழ். வேலணை 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Euskirchen-Kall ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் லிங்கேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அழகான வார்த்தை அப்பா
ஆயிரம் தடவை சொன்னாலும்
அழகான வார்த்தையிது
இதயத்தின் ஆழத்தில்
உதித்து உதிரத்தை
உறைய வைக்கும் வார்த்தையிது
ஈரமில்லா உள்ளத்தையே
உவகை கொள்ள செய்யும் வார்த்தையிது
உரிமையுடன் கூப்பிட்டு
உலகை வெல்லும் வார்த்தையிது
ஊரார்கள் முன்னாடி
உரம் தரும் வார்த்தையிது
எங்கெல்லாம் சென்றாலும் எம்
முகவரி சொல்லும் வார்த்தையிது
ஏமாற்றும் உலகத்தில்
ஏமாளியாகாமல் தரும் வார்த்தையிது
ஐஸ்வர்யம் அனைத்தையுமே
அள்ளித்தரும் வார்த்தையிது
ஒற்றுமையை எமக்கெல்லாம்
சொல்லித்தரும் வார்த்தையிது
ஓடோடி கட்டியணைத்து முத்தம் தரும் வார்த்தையிது
ஒளவுடதமாய் அனைத்தையும்
அனைவருக்கும் கற்றுத்தரும் வார்த்தையிது
உள்ளங்கை உறவுயிது
உயரத்தில் வைக்க நினைக்கும் உறவுயிது
அதனால் தான் என்னவோ உயிர் எழுத்தால் உண்மை நினைத்து
உள்ளம் கலங்கி வழி புரியாமல் தவிக்கின்றோம்
அப்பா அப்பா அப்பா.....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!