

திதி:26/08/2025
யாழ். புலோலி தெற்கு சின்னத்தாய் ஸ்ரீபுரபதியைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு, கிளிநொச்சி, பதுளை பண்டாரவளை, கொழும்பு, ஜேர்மனி Erkelenz, கனடா Madoc ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சூரியகுமாரன் செல்வத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே
நீங்கள் பிரிந்து
ஒரு வருடம் ஓடிப்போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்
ஓராண்டு கடந்தும்
உங்கள் நினைவுகள் எமை
தினமும் வாட்டி வதைக்கின்றது.
நீங்கள் இல்லாத உலகம்
நிம்மதி இழந்து தவிக்க
போகும் பாதைகள் புரியாமல்
நித்தமும் நினைக்கையில்
கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து
பாயிது ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்..
உங்களின் ஆத்மா சாந்தியடை
யஎல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
Our thoughts & prayers to Kumar & family. We were so sad to hear of Soori's passing. Take Care