Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 05 JAN 1949
இறப்பு 21 MAY 2025
அமரர் சோமாதேவி புவிராஜசிங்கம்
வயது 76
அமரர் சோமாதேவி புவிராஜசிங்கம் 1949 - 2025 அரியாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அரியாலை புங்கன்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமாதேவி புவிராஜசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
 பிரிந்தது தான் ஏனோ
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள் வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
 தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ
வைத்து உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமியே எங்கள் அன்புத் தெய்வமே!
அம்மா? என்று குரல் எழப்புகிறோம் ஆனால்..
பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து
 கொண்டு இருக்கிறீங்கள் அம்மா…

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

18-06-2025 புதன்கிழமை அன்று கீரிமலையில் கிரியைகள் இடம்பெற்று தொடர்ந்து 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று எமது இல்லத்தில் (இல.20, வில்வம் தெரு லேன், புங்கன்குளம், அரியலை) 31ம் நாள் நினைவஞ்சலியும், மதியப்போஷன நிகழ்வும் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.