ஶ்ரீதரன் எம் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த நேசத்துக்குரியவனே பேசத்தெரிந்து பேசாது இருப்பவர்க்கு மத்தியிலே பேசாமல் எம்முடன் பேசிக்கொண்டிருந்த ஒரே உறவு நீயடா😢 தொலைபேசி எடுத்து வீடியோவில் வந்தால் , உன் சிரித்த முகமும், மலர்ந்த விழிகளும் ஆயிரம் கதை சொல்லுமடா கள்ளம் கபடமில்லாத உன் வெள்ளைச்சிரிப்பும், எல்லோரிடமும் ஒரே மாதிரிப்பழகும் உன் இயல்பும் இனி யாரிடம் காண்போமடா? தவமாய் தவமிருந்து எம் ஆசையம்மா பெற்ற தவநேசனே நீ எல்லோருடைய நேசத்துக்குரியவனே நேசத்துக்குரியவர்களை நீண்டநாள் வாழ விடுவதில்லை காலனவன்- ஏனெனில் காத்திருப்போர் பட்டியலில் காலனும் காத்திருக்கிறான் போலும் உன் காதலுக்காக நிம்மதியாய் நீ உறங்கு ஶ்ரீதரா உன் நினைவுகளைச் சுமந்தபடி உன் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறோம் அன்புடன் அக்கா வசந்தினி ஆனந்தன் டென்மார்க்