யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராசையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-10-2023
அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே உம்
அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா
நீ இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
கடமைகள் நிறைவு கண்டு – இன்று
காலமோ பத்தாண்டு ஆனது – என்று
போறது கதி தான் மோட்சம்
பெற்றது நீங்கள் எனினும்
பாசத்தில் பரிதவித்தோம்
பரமமே தகுமோ ஐயா
நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.