என் இரண்டு வயதிலிருந்து ஏழுவயதுரை இலங்கையில் அனுபவித்த என் அப்பப்பாவின் பாசத்தை மீண்டும் என் இருபத்திரெண்டாவது வயதில் என் கணவர் மற்ரும் மூத்த மகளுடன் கனடா நாட்டில் அனுபவிக்க வந்து இன்று அப்பப்பாவின் தொன்னூற்ரி எட்டாவது வயதுவரை அப்பப்பாவின் பாசத்தையும் அன்பு முத்தங்களையும் அனுபவித்ததேன்.ஆனால் இனி என் அப்பப்பாவின் அன்பு கதையையும் ஆசை முத்தத்தையும் என்றும் வாங்கமுடியாத அளவிற்கு நீண்டதூரம் சென்றுவிட்டீங்களே என்அப்பப்பா. அம்மாவின் அப்பா அம்மப்பா என்றாலும் நான் முதல் முதலில் கூப்பிட்டது அப்பப்பா என்றுதான். இன்றுவரை அப்பாவென்ற சொல்மாறவேயில்லை.இனி நான் அப்பப்பாவென்றும் என் பிள்ளைகள் பாட்டாவென்றும் கூப்பிட்டாலும் கேட்கமுடியாத தூரத்திற்கு எங்களை தவிக்கவிட்டு போயிற்றீங்களே என் அப்பப்பா.ஆனால் நான் உங்களிடம் அனுபவித்த பாசத்தையும் அன்பு முத்தத்தையும் உங்களால் கொண்டுசெல்ல முடியாதுஅப்பப்பா. அப்பப்பா நீங்க இனி வரமுடியாத நீண்டாதூரம் சென்றிருந்தாலும் என் அப்பப்பாவிற்கு சென்ற இடத்தில் அமைதியும் நிம்மதியும் கிடைக்க நான் வணங்கும் நயீனாதீவு நாகபூசணி அம்மனை என்றும் வேண்டுவேன் என் ஆசை அப்பப்பா.