நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா ஓமந்தை மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் கயல்விழி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அருமை மகளே!!!
காலை கண்விழித்த நொடி முதல் உன் ஞாபகங்கள்
உன் நினைவுகள் எங்கள் மனதில், அழியா சுவடுகளாய் பதிந்துள்ளன
நீ இல்லாத வாழ்க்கை, நரகமாய் உள்ளது மகளே!!
உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது.
பாசமுள்ள சகோதரியே எம்மை
பரிதவிக்க விட்டு பறந்து நீ சென்றதும் ஏனோ?
கலங்கி துடித்தாலும் கண் காணாமல் நாம்
அழுதாலும் உன் ஆன்மா ஆண்டவன்
காலடியில் சாந்தியடைய அனுதினமும்
நாம் இறைவனை பிராத்திக்கிறோம் !
உன் பிரிவால் ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
உன் ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்
தகவல்:
சிவஞானகி(அம்மா- லண்டன்)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute