

யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட சோமாஸ்கந்தசாமி யோகேஸ்வரன் அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தசாமி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராசா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற அமுதகரன் மற்றும் அமுததீபன், பிரியதர்சினி, யோகதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன் மற்றும் மகேஸ்வரன், Dr. மங்களேஸ்வரன், கருணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நிவேதினி, சுபசிறி, ஈழவர்த்தனன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
வன்சிகா, கவின், லக்ஹ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.