இந்தியா மதுரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளரும், தமிழறிஞரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா அவர்கள் 11-09-2026 வெள்ளிக்கிழமை அன்று உடல்நல குறைவால் இறைவனடி சேர்ந்தார்.
ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை மதுரை ஆரப்பாளையம் வெள்ளிவீதியார் மாநகராட்சிப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வி அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை (B.A.) மற்றும் முதுகலை (M.A.) தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றதோடு அதே கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராகவும் பணியாற்றினார்.
இனிய தமிழில் நகைச்சுவையுடன் உரையாற்றும் தனித்துவமான திறமையால் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இவர் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் சமூகச் சூழல்களையும் மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தி, தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் மக்களிடம் எளிமையாகக் கொண்டு சென்றார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியம், திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் குறித்து எளிமையான முறையில் விளக்கமளித்து வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் தமிழ் இலக்கியத்தின் சுவையை பொதுமக்களிடம் கொண்டு சென்றார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
12,000 மேற்பட்ட பட்டிமன்றங்களிக் நடுவராக இருந்துள்ளார்.
தமிழ் இலக்கியத் திறனாய்வு மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியதுடன், மதுரை கம்பன் கழகம் ஒருங்கிணைத்த திங்கள் சொற்பொழிவுகளைத் தொகுத்து நூல்களாகவும் வெளியிட்டுள்ளார்.
விருதுகள்
2021 ஆம் ஆண்டின் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது.
2010 ஆம் ஆண்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ்ப் பேரறிஞர் கௌரவம்.
2000 ஆம் ஆண்டின் தமிழக அரசின் கலைமாமணி விருது.
தமிழி மாமணி விருது.
பட்டிமன்ற அரசன் விருது.
இன்னும் பல்வேறு வகையான விருதுகளை பெற்ற இவர் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தனது பேச்சாற்றல், எழுத்து மற்றும் பணியின் மூலம் சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளார். அன்னாரின் மறைவு தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரது நினைவும் தமிழ்ப்பணியும் என்றும் நிலைத்திருக்கும் அவரது மறைவிற்கு RIPBOOK, சினி உலகம் இணையதளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் நலம் விரும்பிகள் அனைவரின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.