யாழ். குப்பிளான் கட்டுவனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்டிந்த சொக்கலிங்கம் தயாளன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
உன் உதவி கேட்டு தேடி வர நினைத்தபோதெல்லாம்
நீயாக ஓடி வந்து உதவி செய்த உத்தமனே
கேட்காத உதவிகளைக் கூட கேட்டுச் செய்தாய்
கள்ளமில்லாப் புன்சிரிப்பால் கவர்ந்திழுத்தாய்
மற்றவரை ஏழ்மை கண்டவர்களுக்கு
உன்னால் இயலுமட்டும் உதவி செய்தாய்
முரண்பட்ட கருத்தாயிருப்பினும் ஏற்ற இறக்கமாய்
சொல்லி அதில் இணக்கம் ஒன்று காண்பாயே
காசுக்கு கணக்கு வைத்து கணக்காய் பழகும் உலகில்
நீ நேசம் காட்டும் மானிடனாய் இருந்தாயே
உழைப்பால் உயர்ந்து உயரத்தை அடைந்தாலும் நீ
தொடக்கத்தை திரும்பப் பார்த்து அடக்கம் கொள்வது உன் பண்பு
இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லை என்றால்
விடுவானா என்ற கண்ணதாசன் கவிதைக்கு பொருள்
கொடுத்துச் சென்றவனே கரையிடை சேர்க்கும் கோணமாமலை
அமர்ந்தவன் கடலில் கரைசேர்ந்து பிறவில் பெருங்கடல் நீந்திக் கடந்தாயோ...
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேராதார்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறவனைப் பிரார்த்திக்கும்.
மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சகோதரர், உற்றார், உறவினர்
ஆழ்ந்த அனுதாபங்கள் மறக்கமுடியவில்லை