யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் ஆனந்தகுமார் அவர்கள் 20-12-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
திதி : 07-01-2025
”உங்கள் நினைவு மறையுமோ!!”
நாட்கள் நகர்கின்றதா இல்லை பறக்கின்றதா!
எங்களை நிர்க்கதியாய் தவிக்கவிட்டு
எங்களின் உயிருக்குயிரானவரே
எங்களைப் பிரிந்து ஆண்டு ஒன்று மறைந்ததையா
காலம் நகரலாம் கண்ணீரும் கவலையும்- என்
இதயத்திற்கு மட்டுமே சொந்தமாய் போனதையா
என்னுயிரே! ஏன் இந்த சுமை தந்தீர்?
என் உயிர் உள்ளவரை சோகத்தை....
ஏன் சுமக்கவைத்து விடைபெற்றீர்!
எத்தனை கதைகள்.. எத்தனை வசனங்கள்..
எல்லாம் நான் கேட்டும்- என்னுயிரே!
உங்கள் ஆத்மா என்னோடு இணை நின்று
என்னை இயக்கிச் செல்வதால் தான்
தனியாக நான் நிமிர்ந்து நிற்கின்றேன்...
இரவென்றும் பகலென்றும் சுழன்று நான் ஓடுகையில்
இணையாக என்னோடு நீர் நின்று இயக்குவதை
என் மனம் மட்டும் தான் உணர்ந்து இளைப்பாறும்
நித்தம் என்னோடு உங்கள் ஆத்மா உரையாடுவதால்
நிமிர்ந்து நான் நின்று உங்கள் பணியாற்றுகின்றேன்..!!
We will always miss you Ananden Thatha