Clicky

பிறப்பு 30 NOV 1966
இறப்பு 02 MAY 2020
அமரர் சோபனா முரளீதரன்
Service Canada Benefits Officer with the Government of Canada, Supervisor at the Public Library Markham, Toronto
வயது 53
அமரர் சோபனா முரளீதரன் 1966 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தேவரசஞ்சன் (தேவா) 05 MAY 2020 Canada

நண்பனே ! மிகுந்த துயரமான செய்தி எமது ஆழ்ந்த அநுதாபங்கள் "மரணம் கூட ஒருவருடைய அந்தரங்மான விடயம்" உண்மைதான் ... என்ன சொல்லி ஆறுதல் சொல்லமுடியம் என்னால் ? நான் தற்போதைய நாட்களில் எழுதிய கவிதை ஒன்று சகோதரி சோபனாவிற்கு சமர்ப்பணம் .. ------------- கணப்பொழுது ஓய்வுக்காய் காத்துக்கிடந்தோம் இப்போது கணங்கள் மணிகளாய் நீண்டு வதைக்கிறதே சுதந்திரப் பறவைகளாய் சுற்றித் திரிந்தோம் இப்போது சிறகிழந்து சிறைப்பட்டோம் செய்தி செய்தி செய்தி ... எங்கும் சோகம் பயம் அவநம்பிக்கை சமூக அவலம் தனிமனித துயரம் அதையும்தாண்டிய உறவுகளின் தேவை உயிர்கள் உணர்ந்து கொண்ட அன்பு அன்பு அன்பு ... அதை பகிரமுடியாமல் உயிரிழந்த பார்வை உயிரற்ற பேச்சு உயிர்வாங்கும் மூச்சில் எதையோ பறிகொடுத்த துயரம் புரிந்தும் புரியாத மொளனம் மொளனத்தின் அலறல் மட்டும் மனங்களுக்கிடையில் ... -------------