Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 19 APR 1963
மறைவு 12 JUN 2022
அமரர் சிவயோகம்பிள்ளை கங்கேஸ்வரி
வயது 59
அமரர் சிவயோகம்பிள்ளை கங்கேஸ்வரி 1963 - 2022 களுவாஞ்சிக்குடி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம்பிள்ளை கங்கேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.

களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்தவருமாகிய கங்கேஷ்வரி சிவயோகம்பிள்ளை நம்ப முடியவில்லை இது நிஜமா? நீ எங்கள் அருகில் இல்லையா!

நிஜமாய் வாழ்ந்து எங்கள் நினைவுகளுடன் கலந்து நிம்மதியாக விண்ணுலகம் சென்ற என் மனைவியைப் பற்றிய சில வரிகள்.

எனது மனைவியாய், துணையாய், அன்னையாய், வழிகாட்டியாய் என் பிள்ளைகளுக்கு தாயாய் மட்டுமல்ல, சிநேகிதியாய், தலைவியாய் வாழ்ந்து வழிகாட்டி உயர்ந்த இடத்தில் அழகாக மரியாதையாக வாழ வழியமைத்து கொடுத்தாய். இன்னும் எங்களுக்கு ஒளிவிளக்காக தெய்வமாக துணை இருப்பாய். எனது குடும்பத்து மட்டுமல்ல நமது எல்லா சகோதர சகோதரிகளுக்கும், நமது பெரியவர்களுக்கும் கூட, தேவைப்படும் போதெல்லாம் தேவையான உதவிகளை மனமுவந்து செய்து திருப்தி பெற்றாய்.

வெளிநாடுகளில் பொதுவாக ஜப்பானில் என்னுடன் வாழ்ந்தக் காலங்களில் கூட தனது அன்பான புன்சிரிப்பால் தமிழ் கலாச்சாரம் மாறாமல் அழகாக சேலை அணிந்து எப்போதும் நெற்றியில் குங்குமத்துடன் அந்நாட்டு ஊர் மக்களின் கவனத்தை ஈர்த்து அவர்கள் தயங்கி தயங்கி உன் அருகில் வந்து பேசிப் பழகி தமிழ் பண்பாட்டின் சிறப்பை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.

கனடாவில் குடியேறிக்கூட இங்குள்ளவர்களையும் பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் அன்பாக பேசிப்பழகி நிறைய நல்ல உள்ளங்களை சேர்த்து வைத்துள்ளார். எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்த் பிள்ளைகளை நேர்மையான முறையில் நல்ல பழக்க வழக்கங்களில் வளர்த்து தன் அன்பான வார்த்தைகளிலேயே பேசி நல்ல வழியில் வளர்த்துவிட்டு தேவையான செல்வங்களையும் சேகரித்துக் கொடுத்துவிட்டு இறுதியில் அமைதியாக விண்ணுலகம் சேர்ந்தார்.

கனடாவில் குடியேறிக்கூட இங்குள்ளவர்களையும் பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் அன்பாக பேசிப்பழகி நிறைய நல்ல உள்ளங்களை சேர்த்து வைத்துள்ளார். எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்த பிள்ளைகளை நேர்மையான முறையில் நல்ல பழக்க வழக்கங்களில் வளர்த்து தன் அன்பான வார்த்தைகளிலேயே பேசி நல்ல வழியில் வளர்த்துவிட்டு தேவையான செல்வங்களையும் சேகரித்துக் கொடுத்துவிட்டு இறுதியில் அமைதியாக விண்ணுலகம் சேர்ந்தார்.

கடைசியாக ஒரு சில வரிகள்

என் அன்பே என் தெய்வமே
உனக்கு நான் அளித்த உறுதிமொழிகளை
 காப்பாற்றி நீ சொன்னபடி நடந்து
உன் நினைவுகளால் உயிர் உள்ளவரை
நிமிர்ந்து நடப்பேன்.

சில துளி கண்ணீர் அஞ்சலி

நான் உனக்காக ஒவ்வொரு நாளும்

ஏங்கி அழ வேண்டும் ஏனென்றால்
உலகில் கிடைக்கும் எல்லா
சுகங்களையும் விட மேலானது
 உன் பிரிவின் ஏக்கத்தால் ஏங்கி ஏங்கி
 அழும்போது எனக்கு கிடைக்கும்
பெரும் சுகம் மனஅமைதி.
உன் ஆத்மா சாந்தியடையட்டும்.

உத்தர கிரிகை இடம் - களுவாஞ்சிகுடி கடற்கரை
திகதி - 07-09-2022

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 07-09-2022 புதன்கிழமை அன்று காலை களுவாஞ்சிகுடி கடற்கரையில் நடைபெறும் கரும காரியங்களிலும், தொடர்ந்து Dilukshan Resort Hotel ல் நடைபெறும் அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் கலந்து இறைவனை பிரார்த்திப்பதோடு, மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், கணவர், பிள்ளைகள், மருமக்கள் மற்றும் குடும்பத்தினர்
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.