எங்கே சென்றீர்கள் எமது சின்னம்மாவே! சின்னம்மாவின் இழப்பானது நாம் எமது தாயை இரு முறை இழந்தது போலுள்ளது. நாம் எமது தாயை இழந்த பின்னும் நீங்கள் எமது தாயைப் போலவே வாழ்ந்து நாம் சின்னம்மா என்று அழைக்கும்போதெல்லாம் எமது தாயாகவே ஒளிர்ந்தும் ஒலித்தும் அரவணைத்தும் வாழ்ந்தீர்கள். உங்கள் சுயநலமற்ற வாழ்க்கை உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்ககாவும், உறவிணர்களுக்காகவும், ஊருக்காகவும், நாட்டுக்காகவும் மற்றும் உலகத்திக்காகவும் வாழ்ந்த வாழ்க்கையாகும். உங்கள் வாழ்க்கையானது தொண்ணுறு வயதைக் கடந்தும் மிளிர்ந்து நீண்ட ஆயுள் அரச பரம்பரைக்கு மட்டும் உரியது அல்ல என்பதை உணர்த்தி நீங்களும் நல்ல சேவை செய்ததன் மூலம் எல்லோருக்கும் ஒரு மகா ராணியாகவே வாழ்ந்துள்ளீர்கள் என்பதை உங்களை அறிந்தவர்கள் நன்கு உணர்வார்கள். நீங்கள் பல பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாட்டடை விட்டு குடிஅகன்றாலும் உங்களது உடுப்பிட்டி என்ற ஊர்ப் பற்றும் நாட்டுப் பற்றும் உங்களை விட்டு அகலாமல் அவை ஆலமரம் போல் விழுது விட்டு தழைத்தன. உங்கள் உதவிகள் மூலம் தமது வாழ்க்கையில் முன்ன்னேறியவர்கள் பலர் உங்களை நினைத்த வண்ணமே வாழ்வர். அவர்களின் நினைவுகளுடன் உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்! உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! குமாரசுவாமி சங்கர் (நீங்கள் பாசமாய் அழைக்கும் சங்கு!)