Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 16 JAN 1940
உதிர்வு 26 DEC 2025
திருமதி சிவயோகம்மா பரமலிங்கம் (யோகம் ரீச்சர்)
ஓய்வுநிலை ஆசிரியர்
வயது 85
திருமதி சிவயோகம்மா பரமலிங்கம் 1940 - 2025 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 206/3 பிறவுன் வீதி யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவயோகம்மா பரமலிங்கம் அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகத்தம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா விசாலாட்சி தம்பதிகளின் மருமகளும்,

பரமலிங்கம்(பிரதம லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. ஸ்ரீகிருஷ்ணா(எலும்பு முறிவு வைத்திய நிபுணர், யாழ் போதனா வைத்தியசாலை), ஸ்ரீராகவன்(Senior Systems Engineer, Australia) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr. ரஜனி(பொது வைத்திய நிபுணர், யாழ் போதனா வைத்தியசாலை), ஷர்மிளா(Data Systems Scientist, Australia) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீவாஷினி, ஸ்ரீவைஷ்ணவி, ஹிர்திகன், திவ்யன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, கிருஷ்ணம்மா, கனகம்மா மற்றும் ஈஸ்வரி, கலைமகள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வித்துவான் ஆறுமுகம், தாமோதரம்பிள்ளை, விஜயரட்ணம், வடிவேலு, இலங்கைநேசன், தனலட்சுமி, யோகம்மா, சேனாதிராஜா, சாந்தலிங்கம் மற்றும் தவமணி, முத்துலிங்கம், செல்வநாயகி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Dr.ப.ஸ்ரீகிருஷ்ணா - மகன்
ப.ஸ்ரீராகவன் - மகன்