யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் சிலாபம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியக்குருக்கள் சிவசண்முகானந்தேஸ்வரசர்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31ம் நாள் நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!
உலகை விட்டுப் பிரிந்தாலும்- உங்கள்
நினைவு
எங்கள் நெஞ்சில் தான் குடியிருக்கும்
உறவை விட்டுப் பிரிந்தாலும்- உயிரே
எங்கள் உயிர்மூச்சும் உம்மோடு தான் இருக்கும்..
நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details