யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தார்கேணியைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடம், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசோதி சிவபாதசுந்தரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
🥀 அம்மா… உன்னை எப்படி மறப்போம்?
எம் முன்னே வாழ்ந்த தெய்வம் நீங்களம்மா…
இன்று எம் கண்களுக்கு எட்டாத தூரம் சென்றாயே அம்மா…!
எத்தனை பேர் என்னை சுற்றி இருந்தாலும்,
“எம் அம்மா இருக்கிறாள்” என்ற நிம்மதிக்கு
இனி எதுவும் ஈடாகுமா…?
நாம் அழுதபோது
எம் கண்ணீரை துடைத்த
கைகள் எங்கே…?
நாம் சோர்ந்தபோது
எம்மை தேற்றிய
உங்கள் வார்த்தைகள் எங்கே…?
உலகமே எங்களை விட்டு
விலகினாலும்
நீங்கள் மட்டும்
எங்களை விட்டு விலக மாட்டாய்
என்று நினைத்திருந்தோம் அம்மா…
ஆனால் இன்று
நீயும்
எங்களை தனியாக விட்டுச் சென்றுவிட்டாயே…!
உங்கள் மடியில் கிடைத்த நிம்மதி,
உங்கள் குரலில் கிடைத்த ஆறுதல்,
உங்கள் அன்பில் கிடைத்த பாதுகாப்பு—
இனி எம் வாழ்நாள் முழுவதும்
நினைவுகளாக மட்டுமே…
காலம் கடந்து போகலாம்…
வாழ்க்கை மாறிப் போகலாம்…
ஆனால் எம் இதயத்தில்
நீங்கள் விட்டுச் சென்ற இடம் மட்டும்
என்றும் வெறுமையாக தான் இருக்கும்…
அம்மா…
நீங்கள் என்னுடன் இல்லையென்றாலும்,
எங்கள் ஒவ்வொரு மூச்சிலும்
எங்கள் நினைவிலும்
என்றென்றும்
நீயே வாழ்வாய் அம்மா… ️🤍
சிவசோதி தாயே எங்கள் அம்மா
உங்கள் உடலின் உயிர்மூச்சு நின்று
ஆண்டுகள் இரண்டு
ஓடிமறைந்தும்
அழுகையும் ஓயவில்லை
கவலையும் தீரவில்லை
அம்மா
அருகிருந்து மகிழ்ந்த பொழுதுகள்
நினைந்திட தினம் கண்கள் நிறையுதே
நித்தம் பிள்ளைகள் பேரர்கள் மருமக்கள்
நினைவோடு இருந்த எங் கள் தாயே
அப்பாவை இழந்துதவித்திட
தாயும் தந்தையுமாய்
தாங்கி நின்றவாறு
ஓயாது உறங்காது வளர்த்தீர்களம்மா
உங்கள் பிரிவு என்றும் ஆறமுடியா சோகமே
மீண்டும் பிறந்து வந்துவிடுதாயே
அம்மாவின் அழகிய பாதங்களில்
பூச்சொரிந்து வணங்குகின்றோம் !