
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கம்பஹா வத்தளை, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி செல்வகுமார் அவர்கள் 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா சிவசாமி(முன்னாள் கிளிநொச்சி Lallitha Trading Company, Tank View Hotel, csc Wine Store உரிமையாளர்), லலிதாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சரோஜா தம்பதிகளின் மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சேஷான், திலுக்ஷன், விதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனடாவைச் சேர்ந்த பரிமளபவானி, காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் லண்டனைச் சேர்ந்த தமிழ்செல்வி, கொழும்பைச் சேர்ந்த லலித்குமார்(குமணா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிகந்தநாதன்(கனடா), இரஞ்சலிங்கம்(லண்டன்), சாந்தி(கொழும்பு), தாமரைச்செல்வி(டென்மார்க்), கொழும்பைச் சேர்ந்த கலைச்செல்வி, மோகன், ஸ்ரீநாத் ஆகியோரின் மைத்துனரும்,
பிரபாதரன்(டென்மார்க்), விக்ரம்(கொழும்பு) ஆகியோரின் சகலையும்,
மலர்(கொழும்பு) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
கனடாவைச் சேர்ந்த அருணன், அற்புதன், கீர்த்திகா, லண்டனைச் சேர்ந்த சுபானு, ராகவன், சங்கவன், கொழும்பைச் சேர்ந்த வினோஷன், பிரமோதினி ஆகியோரின் மாமனாரும்,
டென்மார்க்கைச் சேர்ந்த நிரோஷன், நிவேதன், நிவேதிதா, கொழும்பைச் சேர்ந்த பரத் ராஜ், கெவின் ராஜ், தேஷாத் ராஜ் ஆகியோரின் சித்தப்பாவும்,
தருணி அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2021 திங்கட்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details